ராஜ்மவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்.’ ரிலீஸ் எப்போது?

slider சினிமா
ss-rajamouli-rrr

 

மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காவியப் படமான  ’பாகுபலி’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜ்மவுலி  தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சுமார் ரூ. 350 கோடியில் தயாராகி வரும் இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்வை பின்னனியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.  ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் படப்பிடிப்பு வெகுவேகமாக நடைபெற்று வருகிறது என்றும், இப்படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி ரிலீஸாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.