அடுத்த அடி எடுத்து வைக்கும் கமல்!

உலகம்
kamal

 

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து தலைவராக இருந்து வந்தாலும், சினிமாவில் எந்தவொரு முன்மாதிரிக்கும் துணை நிற்பவர். இதன்படி இப்போது ஆரம்பமாகிக் கொண்டிருக்கும் வெப் தொடர்களுக்கும் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

வெப் தயாரிப்பு உலகில் ‘ஹாஸ்டேஜஸ்’, ‘ரோர் ஆப் தி லயன்’, ‘நச் பலியே’ உள்ளிட்ட வெப் சீரிஸ் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரித்திருக்கும் பனிஜாய் ஏஷியா நிறுவனம், டர்மரிக் மீடியா என்ற நிறுவனத்துடன் இணைந்து மாநில மொழிகளில் இணையதளங்களுக்கான நிகழ்ச்சிகளை உருவாக்கவுள்ளது. இவர்களுடன்தான் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளார். விரைவில் இந்தக் குழுவுடன் அவர் தயாரிக்க உள்ள வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு வரும் என்று  தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில், “எடுத்துவரும் முதல் முயற்சிகளில் ஒன்றாக, பனிஜாய் ஏஷியா மற்றும் டர்மரிக் மீடியாவுடன் இணைந்து, நிகழ்ச்சி உருவாக்கும் அற்புதமான உலகத்துக்குள் நுழைவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. கதை சொல்வதில் என்றும் நம்பிக்கையுடையவன் நான். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்துக்கு மிகச்சிறந்த கதைகளை எடுத்துச் செல்வதில் இது அடுத்த அடி” என்று பதிவிட்டுள்ளார்.