ஹாலிவுட்டில் நுழைந்த ஜி.வி.பிரகாஷ்!

slider சினிமா
trap-city-gv-prakash

 

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்துவரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருடன் தமிழ் திரையுலகில் ’கிழக்குச் சீமையிலே’, ’சீவலப்பேரி பாண்டி’ போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியனும் அந்த ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ட்ராப் சிட்டி (Trap City) எனப் பெயர் சூட்டி உள்ளார்கள்.

இந்தப் படத்தின் கதை என்னவென்றால்,  அமெரிக்காவில்  பாடகன் ஒருவன் வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்குச் சேர்கிறான். வேலைக்கு சேர்ந்தபின்னர் பாடகன் எழுதிய ஒரு பாடல் உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக, அவன் பாடல் பிரபலமாகும் போது அவன் கைது செய்யப்படுகிறான். அவன் குற்றத்தின்  நிமித்தம் அவன் புகழும் பரவுகிறது. இப்படி இருக்க, அவனைக் கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்தப் பாடகன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

இந்த சுவாரஸ்யமான கதை அமெரிக்காவிலுள்ள நேஷவில் (Nashville) என்னுமிடத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாக படக்குழு இப்போது அறிவித்துள்ளது. பெரும்பாலும் ‘ ட்ராப் சிட்டி’ இந்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.