அருண் விஜய் நடிப்பை பாராட்டிய ‘மாஃபியா’ இயக்குநர்!

slider சினிமா
mafia arun vijay

  ’துருவங்கள் பதினாறு’ படத்தை இயகிய கார்த்திக் நரேன் தற்போது ‘மாஃபியா’ படத்தை இயக்கியுள்ளார். இதில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல  லைக்கா  நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.  ‘மாஃபியா’ படம் குறித்து ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ’மாஃபியா’ பற்றி இயக்குநர் கார்த்திக் நரேன் கூறுகையில், ‘’  ‘மாஃபியா – பாகம்- 1’ என்னோட 3 வது படம். போலீஸ் கதை. சென்னை பின்னணியில் நடக்கிறது. அருண் விஜய் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியாக நடித்திருக்கிறார். அவரால் எல்லாவிதமான கேரக்டரும் பண்ண முடியும்னு நான் நினைக்கிறேன். அவருக்கு அந்தளவு திறமை இருக்கிறது. இரண்டு வேறு வேறு குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் இடையே நடக்கிற போர் தான் இந்தப் படத்தின் மையக்கதை. நடிகர் பிரசன்னாவின் கேரக்டர் இந்தப்படத்தில் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. பிரியா பாவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவங்களை தேர்ந்தெடுத்தோம். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.   முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். மூன்று நாட்கள் மட்டும் தாய்லாந்தில் எடுத்திருக்கிறோம். பட வேலைகள் மொத்தமாக முடிந்து விட்டது வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது’’ என்று கூறினார்.