அயலான் ஆகும் சிவகார்த்திகேயன்

slider சினிமா

 

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ சமீபத்தில்தான் வெளியானது. இந்தப் படத்தை அடுத்து   ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத்சிங் நடிக்கிறார். மேலும், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டோரும்  நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு வெளியிடப்படாமல் இருந்து வந்தது. தற்போது ‘அயலான்’ என்று பெயர் வைத்து மோஷன் போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் பெரியளவில் வைரலாகி வருகிறது.