ஹாலிவுட் நடிகராகும் பார்த்திபன்!

slider சினிமா
ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன்

 

இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.   இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இப்படம் உலகளவில் பேசப்பட்டது. இப்படத்தை பாலிவுட்டிலும் ரீமேக் செய்கிறார் பார்த்திபன். இதில் பார்த்திபனின் பாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார்.

இந்நிலையில் எனது ’ஒத்த செருப்பு’ படத்தை பார்த்த ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் தன்னை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்ததாகவும், இதன்மூலம் தான் நேரடி ஆங்கில படத்தில் நடிக்க உள்ளதாகவும், இதற்காக மார்ச் மாதம் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் சமீபத்தில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.