குத்துச் சண்டை வீரனாகும் ஆர்யா

slider சினிமா
பா.ரஞ்சித்-ஆர்யா

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரபலமானவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட்டில் ஒரு படம் எடுக்கவுள்ளனர். இதற்கு  ‘கபாலி’ பட இயக்குனர் பா.ரஞ்சித்தை இயக்குநராகவும் நியமித்தது படக்குழு. ஆனால், தயாரிப்புக்கான பணிகள் காலதாமதமாகியதால், அதற்கு முன்பாக தமிழில் ஒரு படம் இயக்க இருக்கிறார் பா. ரஞ்சித்.

இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் படத்துக்கு  ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  இது ஒரு குத்துச்சண்டை வீரனைப் பற்றிய படமாம். படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் நிறையவே உள்ளனவாம்.  ஆர்யா கதாநாயகனாக இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் நடிக்கிறாராம். வில்லனாக இயக்குநர் மகிழ்திருமேனி நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.