விருதுகளிலும் விழாக்களிலும் பேசுவது போலியானது – அமலாபால்

slider சினிமா

 

amalapaul-அமலாபால்

 

 

அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகியுள்ளதாம் அமலாபால் நடித்திருக்கும். ‘அதோ அந்தப் பறவை போல’! காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14-ம் தேதியன்று இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ‘ஆடை’ படத்தில் அமலாபால் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. இதன் பிறகு இந்தப் படம் வருவதால் இதற்கு எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது.

சமீபத்தில் நடிகை அமலாபால் அளித்துள்ள ஒரு பேட்டியில், “சினிமா விழாக்களுக்கு வந்தால் மிகப்பெரிய அளவில் புகழ்ந்து தள்ளி விடுவார்கள். விருது விழாக்கள் என்றாலே போலி. மற்றவர்கள் நம்மை பற்றிப் பேசுவதும் கூட போலியாகவே தெரியும். அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது’’ என்று கூறியுள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.