விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மீண்டும் விஜய்சேதுபதி – நயன்தாரா!

slider சினிமா

 

நயன்தாரா காதலரான விக்னேஷ் சிவன் 2015-ம் ஆண்டில் இயக்கி வெளியான ‘நானும் ரவுடி தான்’ படம் பெரும் வசூலைக் கண்டது. இந்தப் படத்தில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்து, இப்போது வரை நீடித்து வருகிறது. இதன்பிறகு சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்தப் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், படத்தின் பட்ஜெட் அதிகமானதால் அந்த படம் நின்றுபோனது.

இப்போது புதிய கதையை தயார் செய்து நடிகர் விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். இந்தக் கதை விஜய்சேதுபதிக்கு பிடித்துப்போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.  அனேகமாக, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்படி நயன்தாரா நடிக்கும் பட்சத்தில் இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.