இயக்குநர் ஹரியுடன் மீண்டும் இணையும் சூர்யா!

slider சினிமா
prasanna-பிரசன்னா

 

சூர்யா நடிப்பில் கடந்த வருடம் ’என்.ஜி.கே,’  ‘காப்பான்’ படங்கள் ஆகிய வெளியாயின. இப்போது இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தமிழ்ப் புத்தாண்டில் திரைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்திற்கு அடுத்து இயக்குநர் ஹரி இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் பிரசன்னாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே  ‘அஞ்சாதே’,  ‘திருட்டு பயலே- 2’ போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.