நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பில் சிம்பு!

slider சினிமா
hansika simbu

 

நடிகை ஹன்சிகாவின் ஐம்பதாவது படமாக உருவாகி வருகிறது ‘மஹா’.    மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான  ‘செக்கசிவந்த வானம்’ படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், நடிகர் சிம்பு  ‘மஹா’ படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பில் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக  தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் இடைவெளிக்குப் பிறகு நடிகர் சிம்பு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதையாக உருவாகி வரும்  ‘மஹா’ படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில்  ‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார்.