’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்தார் சமந்தா!

slider சினிமா
karthi-trisha

 

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது  ‘ஃபேமிலி மேன்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.  முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா வெப் தொடரில் நடித்தது பற்றி தெலுங்கு ஊடகங்களில் சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், “டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும். வெப் தொடர்கள் இந்தியா முழுவதும் பிரலமாகி வருகின்றன. ரசிகர்களின் வரவேற்பும் கிடைக்கிறது. எனவேதான் வெப் தொடரில் நடித்தேன். இதில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தது. சில நேரம் கதாபாத்திரங்கள் கடினமாக இருக்கும். நினைத்த மாதிரி திரையில் வராமல் போனால் அதில் நடித்தவர்களை விமர்சிப்பார்கள். நினைத்த மாதிரி நடிப்பு அமைந்துவிட்டால் பாராட்டுகள் குவியும்.

’சூப்பர் டீலக்ஸ்’ படத்தை நான் ஒப்புக்கொள்வதற்கு முன்னால் இப்படித்தான் யோசித்தேன். அந்தக் கதாபாத்திரத்தை ஏற்கும்போதே கொஞ்சம் துணிச்சலாகவும், எதிர்மறை தன்மையோடும் இருப்பதை உணர்ந்தேன். அதில் சிறப்பாக நடிக்க முடியுமா? என்ற தயக்கம் இருந்தது. நடிப்பு சரியாக இல்லை என்றால் ரசிகர்கள் திட்டுவார்கள். எனவே அந்தப் படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று பயந்தேன். இறுதியில் நடிப்பது என்று முடிவு செய்தேன். எனது கதாபாத்திரத்துக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. மாறாக சிறந்த நடிகை விருது கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்தது இனிமையான அனுபவம்’’ என்று கூறியுள்ளார்.