கார்த்தியுடன் முதன் முறையாக இணையும் திரிஷா!

slider சினிமா

 

karthi-trisha

 

 

எழுத்தாளர் கல்கியின் காவிய நாவலான ‘பொன்னியின் செல்வன்’ மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட சினிமா படமாக தயாராகி வருகிறது. இப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராயும்,  குந்தவையாக திரிஷாவும்  நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாவலின் முக்கியக் கதாபாத்திரமான ராஜராஜ சோழன் வேடத்தில் ஜெயம் ரவி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை என்பதால், ஜெயம் ரவிக்கு அக்காவாக திரிஷா நடிப்பதாக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதன்படி பார்த்தால் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியுடன் ஜோடியாக திரிஷா நடித்தாக வேண்டும். ஆனாலும் படக்குழு இந்தத் தகவலை இன்னும் உறுதி செய்யாமலே இருந்து வருகிறது.