அந்த மலையாள நடிகரை ஏன் நீக்கினார் இயக்குநர் சீனு ராமசாமி?

slider சினிமா
Shane-Nigam-Seenu-Ramasamy

 

‘தென் மேற்கு பருவக் காற்று’,  ‘தர்மதுரை’ என விஜய் சேதுபதியை வைத்து படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் சேதுபதி நடித்துள்ள  ‘இடம் பொருள் ஏவல்’, ’மாமனிதன்’ போன்ற படங்கள்  இதுவரையிலும் வெளிவராமல் இருக்கின்றன. இந்நிலையில் ஒலிம்பியா மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் புதிய படத்தை இயக்கும் பணிகளில் சீனு ராமசாமி ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஷேன் நிகம் நடிப்பதாக  ஒப்பந்தமாகியிருந்தது.

இந்த ஷேன் நிகம் என்கிற மலையாள நடிகர், மலையாள திரையுலகில் சில படங்களில் இப்போது நடித்தும் வருகிறார். என்றாலும், இவர் கேரள மாநிலத்தில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள நடிகர் சங்கம் தலையிட்டு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது.  இதனால் தற்போது சீனு ராமசாமியின் படத்திலிருந்து ஷேன் நிகம் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக  ‘சாம்பியன்’ படத்தில் நடித்த விஸ்வா நடிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.