‘பாரத ரத்னா’ விருதை விரும்புகிறேன் – குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம்!

slider விளையாட்டு

 

meri_kom-மேரிகோம்

 

மத்திய அரசு குடியரசு தினத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் அறிவித்திருக்கிறது. இதில் விளையாட்டுத் துறையில் எட்டு பேருக்கு விருதுகள் அறிவித்துள்ளது. இந்த எட்டுபேரில் ஆறுமுறை உலக சாம்பியனான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்த விருதை பெறும் முதல் விளையாட்டு வீராங்கனை மேரிகோம்  என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 36.

இந்த விருதுக்கு தன்னை தேர்ந்தெடுத்துள்ளது பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மேரிகோம். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தார். அந்தப் பேட்டியில் மேரிகோம், “எனக்கு வழங்கப்படும் பத்ம விபூஷண் விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற வேண்டும் என்பதே எனது கனவு. தற்போது வழங்கப்படும் பத்ம விபூஷண் விருது, இன்னும் சிறப்பாக செயல்பட்டு பாரத ரத்னா விருதை பெற முடியும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. விளையாட்டுத் துறையில் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே பாரத ரத்னா வென்று இருக்கிறார். அந்த வரிசையில் இரண்டாவதாக நான் இடம்பெறுவேன் என்று நம்புகிறேன். இப்போது எனது உடனடி இலக்கு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது தான். அதன் பிறகே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது குறித்து சிந்திப்பேன். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றினால், நிச்சயம் பாரத ரத்னா கிடைக்கும் என்று நம்புகிறேன். பாரத ரத்னா எனக்கான கவுரவம் மற்றும் மிக உயரிய சாதனையாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

  • எஸ்.எஸ்.நந்தன்