மெகா பட்ஜெட் பாலிவுட் படத்தில் தனுஷ்!

slider சினிமா

 

dhanush-akshaikumar

 

நடிகர் தனுஷ் சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய  ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இப்படத்திற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பின்னர் அடுத்ததாக  ‘ஷமிதாப்’ என்னும் படத்தில் நடித்தார். இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து  பாலிவுட் படங்களில் நடிக்கக வாய்ப்புகள் பல வந்தும் நடிக்காமல் இருந்து வந்தார் தனுஷ். தொடர்ந்து தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.  இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழ், இந்தியில் தயாராகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் தனுஷ்.

முன்பு ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய அதே ஆனந்த் எல். ராய்யே இந்தப் படத்தையும் டைரக்டு செய்கிறார். இதில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கிறார்கள். தனுஷுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.  ஏற்கெனவே ரஜினிகாந்தின் 2.0 படத்தில் அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்து இருந்தார்.  இப்போது தனுஷ் படத்திலும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க அக்‌ஷய்குமார் ரூ.120 கோடி சம்பளம் கேட்டதாகவும், அதைக் கொடுக்க தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.