மலையாளப் படத்தில் நடிக்கும் ஜாக்கிசான்!

slider சினிமா

 

 

மலையாளத்தில் 400 கோடி ரூபாய் செலவில் மெகா பட்ஜெட் படம் ஒன்று தயாராகவுள்ளது. இந்தப் படம் இந்திய விடுதலை போராட்டக் களத்தில் நடைபெற்ற சம்பவங்களை கூறும் படமாக உருவாக இருக்கிறது.

கேரளாவை சேர்ந்த ஏ.எம்.நாயர் என்ற ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் ஓட்டல் நடத்தி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டி வந்தார். இவர் இந்திய தேசிய ராணுவத்துக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கும் உதவிக்கரமாகவும் இருந்து வந்துள்ளார். இவரை நாயர் ஸான் என்று அழைத்துள்ளனர். இவரது வாழ்க்கை சம்பவத்தை தான் படமாக எடுக்க தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது.

இதில், மலையாள பிரபலம் மோகன்லால் ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் உலகளவில் திரை பிரபலமாக விளங்கிவரும் ஹாலிவுட் பிரபலம் ஜாக்கிசானும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இந்தப் படத்துக்கு இப்போதே உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆல்பர்ட் ஆண்டனி என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே நவ்யா நாயர் நடித்த ’கண்ணே மடங்குகா’, ராகுல் மாதவ் நடித்த ’வாடா மல்லி’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கியவர்.