சைக்கோ படம் குறித்து மிரட்டும் மிஷ்கின்!

slider சினிமா

 

 

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் ‘சைக்கோ.  இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்து இப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் கூறுகையில், ’’சைக்கோ படம் பாருங்கள். கண்டிப்பாக குழந்தைகளும், கர்ப்பிணிகளும் இப்படத்தை பார்க்காதீர்கள். இது ஒரு கொலைக்களமான படம். அதனால் குழந்தைகள் மனதளவில் பயப்படுவார்கள். அதேப்போன்று நான்கைந்து காட்சிகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். மற்றபடி 18 வயது நிரம்பிய ஆண், பெண் பார்க்கலாம்’’ என்று கூறியுள்ளார்.