5000 திரையரங்குகளில் வெளியாகும் மலையாளப் படம்

slider சினிமா

 

கேரளாவில் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் நான்காவது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக  இன்றுவரை கேரளாவில் போற்றப்படுகிறார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து  ‘அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற படம் தயாராகி வருகிறது. இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம் அவர் இதுவரை  ஏற்றிராத கதாபாத்திரமாக  இருக்கும் என்கின்றனர். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை பிரபல இயக்குனர்  பிரியதர்ஷன் இயக்கி வருகிறார்.

 

இப்படத்தை வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட ஐந்து மொழிகளில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் ஐந்தாயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது நடிகர் அர்ஜுனின் தோற்றம் அடங்கிய புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜுன் இப்படத்தில் அனந்தன் எனும் போர்வீரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.