ஒரே படத்தில் எட்டு இசையமைப்பாளர்கள்

slider சினிமா
தாராளபிரபு

 

இயக்குநர் ஏ.எல்.விஜய் உதவியாளர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ள படத்தில் எட்டு இசையமைப்பாளர்கள் பணியாற்ற உள்ளதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.  இசையமைப்பாளர்கள் அனிருத், விவேக் – மெர்வின், கபீர் பாஸ்கர், இன்னோ கங்கா, ஷான் ரோல்டன், மேட்லி புளூஸ், பரத் ஷங்கர், ஊர்க்கா ஆகிய எட்டு இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் எட்டு இசையமைப்பாளர்கள் ஒரு படத்துக்கு இசையமைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் எட்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ’விக்கி டோனர்’. செயற்கை கருத்தரிப்புக்கு விந்து தானம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகளை காமெடியாக சொல்லியிருந்த இந்தப் படமே இப்போது ’தாராள பிரபு’ என்கிற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. ஹரீஷ் கல்யாண், தான்யா ஹோப், விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து ஏற்கனவே தெலுங்கில் நாகசைதன்யா நடித்த ’யுத்தம் சரணம்’ படத்தை இயக்கியுள்ளார்.