அஜித்தின் ‘வலிமை’ படம் குறித்து பரவும் வதந்தி!

slider சினிமா

 

actor ajith

 

தமிழ் சினிமாவின் பிரபலம் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு அஜித்தின் அடுத்த படத்தையும் மீண்டும் வினோத்தே இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரே இந்தப் படத்தையும்  தயாரிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்தப் படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழுவினர் அறிவிக்கவில்லை.  ‘வலிமை’ படத்துக்கு தேர்வான நடிகர், நடிகைகளிடம் படம் பற்றிய விவரங்களை வெளியிடக்கூடாது என்று தடை விதித்துள்ளதால் இந்த தகவலும் இதுவரை வெளிவராமல் இருந்து வந்தது.

இந்தப் படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அஜித்துக்கு பிடித்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றனவாம். அனேகமாக ‘ வலிமை’ படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே சமீபத்தில் ரசிகர் ஒருவர் நடிகர்  பிரசன்னாவிடம், ’வலிமை’ படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரசன்னா, ’’தகவலுக்காக காத்திருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார்.   நடிகர் பிரசன்னாவின் இந்த பதிலை வைத்து அவர் நடிப்பது உறுதி எனவும் பேச்சு கிளம்பியது.  இதன் தொடர்ச்சியாக பிரசன்னா, அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் தகவல். இப்போது இந்த தகவலுக்கு ’வலிமை’ படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.