நொறுங்கியது கீர்த்தி சுரேஷின் பாலிவுட் கனவு!

slider சினிமா

 

keethi suresh-கீர்த்தி சுரேஷ்

 

பாலிவுட்டில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கும் ‘மைதான்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இது முன்னாள் இந்திய கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து  உருவாகி வரும் படம். அஜய் தேவ்கான் சையத் அப்துல் ரஹீமாகவும், அவரது மனைவியாக கீர்த்தி சுரேசும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நடித்தார். இந்நிலையில் ‘மைதான்’ படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷை திடீரென்று நீக்கிவிட்டு பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.  இந்த  ‘மைதான்’ படத்துக்காக கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து உடம்பை ரொம்பவே  குறைத்திருந்தார். இதுவே இப்போது அவர் நீக்கத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து  ‘மைதான்’ பட நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “அஜய் தேவ்கானுக்கு ஜோடியாகவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் நடிக்க கீர்த்தி சுரேஷை தேர்வு செய்தபோது அதற்குரிய தோற்றத்தில் இருந்தார். ஆனால், தற்போது எடை குறைந்து ரொம்பவே ஒல்லியாகி விட்டார். கீர்த்தி சுரேஷை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். குழந்தைக்கு அம்மாவாக நடிக்க அவரது உடல்வாகு பொருந்தவில்லை” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலிவுட் படத்தில் நடிக்கும் தனது கனவை நிறைவேற்றுவதற்காக அதிக பிரயாசை எடுத்துக் கொண்டதுதான் கீர்த்தி சுரேஷின் இந்த நிலைமைக்கு காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.