நிதித்துறை அமைச்சர் பதவியை இழக்கப்போகும் நிர்மலா சீதாராமன்!

slider அரசியல்
nirmala-seetha-raman

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு பிப்ரவரி மாதத்தில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யப் போவதாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் பா.ஜ.க.வினர்கூட சற்றும் எதிர்பார்க்காத வகையில் நிதியமைச்சர் பதவி வகிக்கும் நிர்மலா சீதாராமனின் பதவி பறிக்கப்படும் என்றும், குறைந்தபட்சம் முக்கியத்துவம் இல்லாத துறைக்கு அவர் மாற்றம் செய்யப்படுவார் என்கிற ஒரு தகவல் தற்போது அதே டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

விரைவில் இந்தாண்டுக்கான  பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில்தான் இந்த பட்ஜெட்  முடிந்த கையோடு நிர்மலா சீதாராமன் மாற்றப்படுவார் அல்லது அமைச்சர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்படும் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

சமீபத்தில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பொருளாதார மந்தநிலை உள்பட பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பா.ஜ.க. அரசின் மற்ற துறைகளைவிட பொருளாதாரத்துடன் நேரிடையாக சம்பந்தபட்ட துறை என்றால் அது நிதித்துறை தான். மோடி அரசுக்கு பொருளாதார மந்தம் குறித்து எதிர்க் கட்சியினரிடமிருந்து மட்டுமில்ல பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து கொண்டிருக்கிறது. சொந்தக் கட்சியிலே சுப்ரமண்ய சுவாமி பொருளாதார மந்தம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக, சுப்ரமண்ய சுவாமி நிதித்துறை பற்றி நிர்மலா சீதாராமனுக்கு போதிய அறிவில்லை என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். மேலும், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை இழந்துவிட்டு நிற்கிறது. இப்படியே விட்டால் இது வருங்காலத்தில் பெருத்த நஷ்டத்தை தந்துவிடும் என்றும், எனவே இதனை சரிசெய்ய நிதித்துறையை நிர்மலா சீதாராமனிடமிடுந்து பிடுங்கி வேறொரு தகுதியான நபரிடம் கொடுப்பது என்று பா.ஜ.க.வின் டெல்லி தலைமை எடுத்த முடிவு எப்படியோ கசிந்ததால் தான் நிர்மலா சீதாராமன் பற்றிய இப்படியொரு தகவல் வெளியாகி வருகிறது என்கிறது அரசியல் வட்டாரம்.

  குருபரன்