சுந்தர்.சி.யுடன் முதன்முறையாக இணையும் ஆர்யா!

slider சினிமா

 

 

இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான  ‘அரண்மனை’ மற்றும்  ‘அரண்மனை-2’ ஆகிய படங்கள்  ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் சாதனை நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில்  ‘அரண்மனை-3’ம் பாகத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடத்தி வந்தர் சுந்தர்.சி, இந்த மூன்றாம் பாகத்துக்கு கதாநாயகனாக நடிக்க ஆர்யாவிடமும், கதாநாயகியாக நடிக்க ராஷி கண்ணாவிடமும் பேசி வந்த நிலையில், அவர்கள் இருவரும் இப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்கிற செய்தி வரப்பெற்றது. மேலும், இந்தப் படத்தில்  காமெடியர்களாக விவேக்,  யோகிபாபு ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை சுந்தர்.சி. இயக்கத்தில் ஆர்யா நடித்ததில்லை என்பதும், இதுதான் முதல்முறை என்பதும் கவனிக்கத்தக்கது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் சுந்தர்.சி என்கிற தகவலும் இப் படத்தில் பணியாற்றும் இணை இயக்குநர் மூலமாக தெரிய வந்தது.