‘மாஸ்டர்’ தேர்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும்?

slider சினிமா
viyay-vijay sethupathi

 

‘பிகில் படத்துக்குப் பிறகு விஜய்யின் அடுத்த படமாக ‘மாஸ்டர்’ உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு படக்குழு  கடந்த டிசம்பர் 31-ம் தேதி வெளியிட்டது. இதில் விஜய்யின் லுக் மட்டும் இடம் பெற்றிருந்தது.

தற்போது இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பொங்கல் தினத்தில் (15.1.2020) தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிலும் விஜய் மட்டுமே இடம்பெற்றுள்ளார் என்பதால், இப் படத்தின் தேர்ட் லுக் போஸ்டர் எப்போது வெளிவரும்? அதிலாவது விஜய் சேதுபதியின் காட்சிகள் இடம் பெறுமா? என்கிற கேள்விகள் இப்போது இணைய ரசிகர்களிடம் எழுந்துள்ள நிலையில்,  கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.