ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஏக கோபத்தில் நயன்தாரா!

slider சினிமா
nayantharah-நயன்தாரா

 

’அறம்’, ’கோலமாவு கோகிலா’ படங்களைப் போன்று தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிப்பதையே கடந்த சில ஆண்டுகளாக விரும்பி வருகிறார் நயன்தாரா. இந் நிலையில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ’தர்பார்’ படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தார் நயன்தாரா. ஆனால், இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை இயக்குநர் வீணடித்துவிட்டதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்துடன் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

‘தர்பார்’ படத்தில் நயன்தாராவுக்கு சில காட்சிகள் மட்டுமே உள்ளது என்றும், ஒரு துணை நடிகை போலவே அப் படத்தில் நயன்தாரா பயன்படுத்தப்பட்டுள்ளார் என்று வருத்தப்பட்டும், ரஜினி மகளாக வரும் நிவேதா தாமசுக்கு அளித்திருந்த முக்கியத்தும் கூட நயன்தாராவுக்கு இல்லை என்றும்  தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருவதும் தொடர்கிறது. தான் நடித்த பல காட்சிகளை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நீக்கிவிட்டதால், இது குறித்து இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது நயன்தாரா கோபத்தில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

.