திரிஷாவை காப்பியடிக்கவில்லை-சமந்தா

slider சினிமா

             

samantha-சமந்தா

 

தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்த  ‘96’ படம் பெரும் வெற்றி பெற்றது. ரசிகர்கள் ஆதரவும் பெரியளவில் இந்தப் படத்துக்குக் கிடைத்தது. இதனால் இந்த படத்தை தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழியில் எடுக்க பலரும் போட்டி போட்டனர். தற்போது தெலுங்கில்  ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

இதில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிகை  சமந்தா நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டீசர் வெளிவந்து இணையத்தில் அதிகம் வைரலானது. அதில் சமந்தாவின் நடிப்பை திரிஷாவின் நடிப்போடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.  சிலர் பாராட்டினாலும், மறுபுறம் ஒருசிலர் விமர்சிக்கவும் செய்து வருகின்றனர்.

இதுபற்றி டுவிட்டரில் சமந்தா “திரிஷாவின் நடிப்பை அப்படியே காப்பி அடிக்க விரும்பவில்லை. அது எடுபடாது. ஒப்பிடுவதற்காக நாங்கள் படம் எடுக்கவில்லை. கதை இன்னும் அதிகமான மக்களை சென்று சேரவேண்டும் என்பதால் தான் எடுத்தோம்”பதிவிட்டுள்ளார்.