152 கி.மீ. வேகத்தில் பந்து வீசி சாதனை நிகழ்த்திய சைனி!

slider விளையாட்டு
சைனி-இந்திய பந்துவீச்சாளர்

 

இலங்கை கிரிக்கெட் அணி  இந்தியா வந்துள்ளது. மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதன் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி நேற்று (7.1.2019) மத்தியப்பிரதேசத்திலுள்ள இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியாவின் இந்த வெற்றியைவிட இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி குறித்து பெரிய அளவில் பேசப்படுகிறது. காரணம், நேற்றைய போட்டியில் நவ்தீப் சைனி 152 கி.மீ வேகத்தில் பந்து வீசியது தான். நான்கு ஓவர்கள் வீசிய நவ்தீப் சைனி 18 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை பெற்றார். இந்தியாவில் இதுவரை எந்த வேகப் பந்து வீச்சாளரும் 152 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நவ்தீப் சைனி கூறுகையில்,  “வெள்ளைப் பந்து மற்றும் சிவப்பு பந்து இரண்டிலும் நான் நம்பிக்கையோடு பந்து வீசி வருகிறேன். டி20 போட்டிகளில் அறிமுகமானபோது மிக வேகமாக பந்து வீச விரும்பினேன். அதே நேரத்தில், தேவைப்படும்ம்போது மெதுவான பந்து வீச்சுகளின் முக்கியத்துவத்தையும் நான் அறிவேன். ஆகவே, வேகமாகவும், மெதுவாகவும் பேட்ஸ்மென்களை குழப்பும் விதமாக பந்து வீசுவதற்காக நான் நன்றாகப் பயிற்சி செய்து நம்பிக்கையுடன் இருந்தேன். ஏனென்றால் நம்பிக்கையுடன் இருப்பதுதான் எப்போதும் முக்கியம். மேலும், பந்து வீச்சில் தேவைக்கு ஏற்றபடி மாறுபாடுகளைப் பயன்படுத்துவதும் முக்கியம். யார்க்கருடன் (தனுஷ்கா- குணதிலகா விக்கெட்டுகள்) விக்கெட் எடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்’’ என்று கூறியுள்ளார்.

  • எஸ்.எஸ்.நந்தன்