மூன்றாவது முறையாக டெல்லியில் ஆட்சியமைக்ககவுள்ள ஆம் ஆத்மி!

slider அரசியல்

 

arvind kejrival

இந்தியாவின் தலைநகரான டெல்லி யூனியன் தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.. இங்கே தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து வருகிறது. முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி டெல்லிக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தமுறையாவது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. டெல்லியைக் கைப்பற்ற திட்டமிட்டு வேலை செய்துவரும் நிலையில், டெல்லியில் வரும் தேர்தலிலும் ஆம் ஆத்மி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகியிருப்பதால், பா.ஜ.க. முகாம் பெருத்த அதிர்ச்சியடைந்துள்ளது.

டெல்லி யூனியன் 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது. இதற்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் என்று தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்திருக்கிறது. டெல்லி சட்டசபையின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு அமைத்தாக வேண்டும்.

இந்நிலையில், “டெல்லியில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெறும். அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும்” என்று பிரபல ஐ.ஏ.என்.எஸ். – சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி டெல்லியில் ஆம் ஆத்மி குறைந்த பட்சம் 59 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாம். அதேபோல் பா.ஜ.க. கட்சி அங்கு 8 இடங்களை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாம். மேலும், காங்கிரஸ் மூன்று இடங்களை வெல்ல வாய்ப்பு இருக்கிறதாம். தொகுதி வாரியாக பிரித்து பார்த்தால் ஆம் ஆத்மி 64 இடங்களைக் கூட எளிதாக பெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். இந்தக் கருத்து கணிப்பு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் முகாம்களை பெருத்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது கூறப்படுகிறது.

இதற்கான காரணங்களாக,   கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆம் ஆத்மி ஆட்சி டெல்லியில் நிறைய திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறது என்றும், வறுமையில் இருப்பவர்கள், பெண்களை மையப்படுத்தி நிறைய இலவச திட்டங்களை கொண்டு வந்து உள்ளது என்றும், இதனால் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை மீண்டும் பெறும் என்றும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவேற்றப்படுவதும் தொடங்கிவிட்டது. ஒருவேளை இந்தமுறை ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் காங்கிரஸுக்கு அடுத்து டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சியமைத்த பெருமையை ஆம் ஆத்மி பெறும்.

   -விசாகன்