பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ஜீவாவின் ‘சீறு’!

slider சினிமா
சீறு

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற  ‘றெக்க’ படத்தை இயக்கிய ரத்ன சிவா, அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘சீறு’. இதில் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஜீவாவிற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள  ‘செவ்வந்தியே…’ பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ள இப்படம் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸாகும் என்று முன்பு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், படத்தின் பின்னணி வேலைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படம் பிப்ரவரி 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதேபோல் ஜீவா நடித்துள்ள  ‘ஜிப்ஸி’ படம் வருகிற 24-ம் தேதி ரிலீஸாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.