தமிழர் பெருமை பேசும் தனுஷின்  ‘பட்டாஸ்’!

slider சினிமா

 

pattass

 

பொங்கல் திருநாளை முன்னிட்டு தனுஷ் நடித்த  ‘பட்டாஸ்’  திரைப்படம் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட  இந்தப் படத்தின் டிரைலர் மூலம் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

‘’நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும்’’  என்பதுதான் அந்தப் பாடல். அதுபோல் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ”நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா’’ வசனமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

இயக்குநர் துரை.செந்தில்குமார்  ‘எதிர் நீச்சல்’,  ‘காக்கிச்சட்டை’,  ‘கொடி’ படங்களுக்குப் பிறகு இயக்கியிருக்கும்  ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்.