என் வளர்ச்சியால் அவர் சந்தோஷமாக இருக்கிறார்-ஐஸ்வர்யா ராஜேஷ்

slider சினிமா

 

ஐஸ்வர்யா-ராஜேஷ்

 

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த  ‘கனா’ படத்திற்கு சமீபத்தில் தனிரார் தொலைக்காட்சியில் விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை நயன்தாராவும் கலந்து கொண்டார். விருது பெற்ற ஐஸ்வர் ராஜேஷ் பேசுகையில், “நயன்தாரா மேடத்துக்கும் நன்றி. அவர்தான் இன்றைய நாயகிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம். நாயகியை மையப்படுத்திய படங்கள் வெறும் விமர்சன ரீதியில் வெற்றி என்ற நிலை இருந்தபோது, பணம் வசூல் பண்ணும் என்று நிரூபித்தார் நயன்தாரா. நாயகியை மையப்படுத்திய படங்களுக்கும் வியாபாரம் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவர்தான்.

இயக்குநர் சீனு ராமசாமி சார் கையால் விருது வாங்கியதை மறக்க முடியாது. ஏனென்றால், ‘தர்மதுரை’ படத்தின்போது, “உனக்கு இந்திய முகம். நீ எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம். அப்படியொரு முக அமைப்பு உனக்கு இருக்கிறது’ என்று கூறினார். அப்பா, இரண்டு அண்ணன்களை இழந்துள்ளேன். ஆகையால் அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே ஓடத் தொடங்கினேன். இப்போது என் வளர்ச்சியில் அவர் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்’’ என்றார்.

விருதுபெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ்  தன்னை பற்றி பெருமையாக பேசியபோது இருக்கையில் இருந்தபடியே தன் நன்றியை தெரிவித்தார் நயன்தாரா.