அமெரிக்க ராணுவம் ஒரு தீவிரவாத இயக்கம் – ஈரான்!

slider உலகம்
america-iran

 

சில தினங்களுக்கு முன்பு ஈரான் ராணுவ தளபதி அமெரிக்க ராணுவத்தின் டிரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இது ஈரானுக்கு பெரும் அதிர்ச்சியாகவும், அமெரிக்கா மீது பெரும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று (7.1.2019) ஈரான் பாராளுமன்றத்தில் அமெரிக்கா ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது உலகளவில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் தீவிரவாதத்திற்கு எதிராக பாடுபடும் ஒரே நாடு நாங்கள்தான் என்பது போன்று தான் இதுவரைக்கும் அமெரிக்கா செயல்பட்டு வந்தது. அமெரிக்கா நினைத்தால் எந்த ஒரு போராளிக் குழுவையும் தீவிரவாத அமைப்பாக குற்றம்சாட முடியும். இதற்கான பவர் அதனிடம் இருக்கிறது. ஆனால், இப்போது புதிய திருப்பமாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, ஒரு நாட்டின் ராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை.  இந்த நடவடிக்கை ஈரானை உலக நாடுகள் திரும்பி பார்க்க செய்துள்ளது.   இதற்காக தீர்மானம் ஈரான் பாராளுமன்றத்தில் நேற்று (7.1.2019)  நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவால் கொல்லப்பட்ட சுலைமானி ஈரான் ராணுவத்திலும், மக்களிடத்திலும் அதிக செல்வாக்கு கொண்டவராக விளங்கி வந்தவர் என்பதும், இவரது இறுதி ஊர்வலத்தில் ஏறக்குறைய 3 லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த இறுதி ஊர்வலத்தின் முடிவில் பேசிய சுலைமானி மகள் அமெரிக்க அதிபருக்கு கடும் சவால்விட்டு பேசியிருப்பதும் உலகளவில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அனேகமாக, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதல் மேலும் வலுவடையும் என்றும், இதன் பாதிப்பு உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், சண்டையும் சீக்கிரத்தில் முடியவடைய வாய்ப்பில்லை என்றும் சர்வதேச வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • நிமலன்