மீண்டும் புது முயற்சியில் பார்த்திபன்!

slider சினிமா
parthipan-பார்த்திபன்

 

பார்த்திபன் இயக்கி நடித்த  ‘ஒத்த செருப்பு’ சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் இவர் மட்டுமே நடித்தார் என்பதும், பல வெளிநாடுகளில் விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கி குவித்தது இந்தப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பார்த்திபன் அடுத்ததாக இயக்கி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு  ‘இரவின் நிழல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுவதையும் ஒரே ஷாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன். ஆசியாவில் இது போன்ற முயற்சியை முதன்முறையாக எடுக்கவுள்ள இயக்குநர் பார்த்திபன் தான். இப்படத்தின் தலைப்பை இயக்குநர் பாரதிராஜா  சமீபத்தில் வெளியிட்டார்.