செகண்ட் லுக் போஸ்டரிலும் அசத்தும் ‘சூரரைப் போற்று’!   

slider சினிமா

suraraipotru second look polster 

பிரபல ‘ஏர் டெக்கான்’ விமானத்தின் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது ‘சூரரைப் போற்று’ படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ’காப்பான்’  படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை   ‘இறுதிச் சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், செகண்ட் லுக் போஸ்டர் ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால் சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.   படத்தின் பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.