விஜய்யுடன் சண்டையிடும் விஜய் சேதுபதி!

slider சினிமா
vijaysethupathi action

 

தற்போது ’விஜய்- 64’ படக்குழு படப்பிடிப்புக்காக கர்நாடாகாவின் ஷிமோகாவில் முகாமிட்டிருக்கிறது. இந்தப் படத்தின்  இரண்டுகட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்புதான்  ஷிமோகாவில் நடைபெறவிருக்கிறது. இளைய தளபதி விஜய்யும்,  வில்லனாக விஜய் சேதுபதியும் சண்டையிடுவது போன்ற காட்சிகளைத்தான் இங்கே படக்குழு படமாக்கவிருக்கிறதாம்.

ஏற்கெனவே நடிகர் விஜய் ஷிமோகா சென்றுவிட்டார்.  விரைவில் நடிகர் விஜய் சேதுபதியும் செல்லவுள்ளாராம். இந்தப் படத்தில் கல்வி முறைக்கும், அதில் இருக்கும் ஊழலில் ஈடுபடுவோருக்கும் எதிராக  கருத்துகள், சிந்தனைகள் கொண்ட கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் விஜய் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.