பிப்ரவரியில் மீண்டும் ’இந்தியன் -2’ ஷூட்டிங்கில் கமல்!

slider சினிமா
kamal in indian2

 

சில மாதங்களுக்கு முன்னர் வட மாநிலங்களில் தொடங்கப்பட்ட  ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு, கடந்த மாதம் மீண்டும் சென்னையில் மீண்டும் தொடர்ந்தபோது ஹீரோ கமலுக்குக் காலில் அறுவை சிகிச்சை நடந்தேறியது. அதைத் தொடர்ந்து எப்போது ‘இந்தியன்- 2’ படப்பிடிப்பில் கமல் கலந்து கொள்வார் என்பது சந்தேகத்துக்குரிய நிலையில் இருந்ததால், அவர் இல்லாத காட்சிகளை முடிக்கலாம் என்று திட்டமிட்டுப் படப்பிடிப்பை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடத்தி வருகிறாராம் இயக்குனர் ‌ஷங்கர்.

கமல், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக, சென்னையில் பிரமாண்டமான அரங்குகள் தயாராகியுள்ளது. அங்கு ஜனவரியில் கமல் இல்லாமல் காஜல் அகர்வாலை வைத்து சில காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளாராம் ‌ஷங்கர். இந்த அரங்கில் தான் கமல் இளமையாகத் தோன்றவுள்ள காட்சிகளையும் படமாக்க இருக்கிறார்களாம்.    இதன் படப்பிடிப்பில் பிப்ரவரியிலிருந்து கமல் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்  என்றும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது.