திருமணத்திற்கு பின்பும் செஸ் சாம்பியனாகிய ஹம்பி!

slider உலகம் விளையாட்டு

 

koneru-hampi-கோனேறு-ஹம்பி

 

 

இந்தியாவில் கிரிக்கெட்டை போலவே இன்னொரு விளையாட்டும் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு என்றால் அது செஸ் தான். செஸ் விளையாட்டில் இந்தியாவின் பெருமையை உலகளவில் நிலைநாட்டியவர் விஸ்வநாதன் ஆனந்த். அவரைத் தொடர்ந்து கடந்த பத்து ஆண்டுகளில் நிறைய இளைஞிகளும், இளைஞர்களும் செஸ் விளையாட்டில் தங்கள் திறமையை சர்வதேச போட்டிகளில் நிரூபித்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் சமீபத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்தத் தொடரின் இறுதிச் சுற்று முடிவில் கோனெரு ஹம்பி, லெய் டிங்ஜி (சீனா), அடாலிக் எகடரினா (துருக்கி) ஆகியோர் தலா 9 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்ததால் டை பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட ஹம்பி சீன வீராங்கனை லெய் டிங்ஜியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியுள்ளார்.

இந்த ஹம்பி திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகளாக செஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார். இவருக்கு இப்போது 32 வயது ஆகிறது.  ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்.  திருமணத்திற்குப் பிறகு மீண்டும் விளையாடத் தொடங்கி ஓராண்டுக்குள்ளாகவே இந்த உலகச் சாம்பியன் பட்டம் வென்று அவர் சாதனை படைத்துள்ளது இந்தியாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ளது.

  • எஸ்.எஸ்.நந்தன்