ஆக்‌ஷன் ஹீரோயின் அவதாரமெடுக்கும் அனுஷ்கா!

slider சினிமா

 

anusha-அனுஷ்கா

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன்  மூன்று படங்கள் இயக்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அந்த மூன்று படங்களில்  ஒரு படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அதுவும் இந்தப் படத்தில் அனுஷ்காவுக்கு ஆக்‌ஷன் ஹீரோயின் ரோல் என்கிற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் சினிமா இயக்குநரான கோவிந்த் நிகலானி எழுதியுள்ள கதையை தழுவித்தான் கவுதம் மேனன் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக சொல்லபடுகிறது. நடிகர் கமல்ஹாசனும்  அர்ஜுனும் சேர்ந்து நடித்து 1996-ம் ஆண்டில் வெளிவந்த ‘குருதிப்புனல்’ படத்தின் ஒரிஜனல் படமான ‘துரோக்கால்’ படத்தின் கதையாசிரியரும் இயக்குநரும் கோவிந்த் நிகலானி தான். இவர் பல தேசிய விருதுகளைப் பெற்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.