பேய் படத்தில் நடிக்கும் சமந்தா!

slider சினிமா
samanthah

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பேய்ப் படங்களுக்கு மவுசு கூடி வருகிறது. இதிலும்  குற்றப் பின்னணியிலான திகில் படங்களுக்கு பெருத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.  நிறைய புதுமுக இயக்குநர்கள் எல்லோரும் இதைப் புரிந்துகொண்டு திகில் படங்கள் எடுத்து வருகிறார்கள். இந்த மவுசை அறிந்த முன்னணி கதாநாயகர்களும் கதாநாயகிகளும் இந்த மாதிரி திகில் படங்களில் ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது  ‘மாயா’ ‘இறவா காலம்’ ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக ஒரு திகில் படத்தை இயக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு சமந்தா தமிழில் நடிக்கும் படம் இது. அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.