வெப் சீரியஸில் களமிறங்கும் வைகைப்புயல்!

slider சினிமா
வடிவேலு

வைகைப் புயல் என்றழைக்கப்படும் வடிவேலுக்கு இன்றைக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கவே செய்கிறது.  சந்தானம், சூரி, யோகி பாபு போன்ற நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஏரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், வடிவேலுவின் பழைய படங்களுக்கு இருக்கும் மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. சில வருடங்களாக பெரும்பாலும் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வருகிறார் வடிவேலு.

இந்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இணையதள தொடர்கள் மீது வடிவேலுவின் கவனம் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.  குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள  ‘குயின்’ இணையதள தொடர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அனேகமாக, வடிவேலு இது தொடர்பான அறிவிப்பை புத்தாண்டில் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள்  தெரிவிக்கின்றன.