தொடங்கியது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு!

slider சினிமா

 

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், நந்தினியாக ஐஸ்வர்யாராய் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஐஸ்வர்யாராய் மட்டும் இரண்டு வேடங்களில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக எடுக்கப்படவுள்ள இந்தப் படத்துக்காக  தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். அங்கு அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும், படத்துக்கான ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டது.

இப்போது தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நேற்று (11.12.2019) ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி நடித்த காட்சிகளை முதலாவதாக மணிரத்னம் படமாக்கினார்.  இதன்பிறகு பிற நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சிகள் அடுத்தடுத்த நாட்களில் படமாக்கப்படவிருக்கிறதாம்.

’பொன்னியன் செல்வன்’  தாய்லாந்தில் சுமார் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது என்றும்,  இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது என்றும் படக்குழு அறிவித்துள்ளது.