’தர்பார்’ படக்குழு புது அறிவிப்பு!

slider சினிமா

 

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இதற்கடுத்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (12-12-2019)  இப்படத்தின் டிரைலரை வெளியிட இருப்பதாக தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அறிவித்துள்ளார்.    ’தர்பார்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.