சிம்புவின்  ‘மாநாடு’ மீண்டும் விரைவில் ஆரம்பம்!

slider சினிமா

 

‘மாநாடு’ படத்துக்கு குறிப்பிட்ட தேதியில் நடிக்க வராமல் சிம்பு தாமதம் செய்ததால் படம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் சில மாதங்கள் கழித்து “படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார். தயாரிப்பாளரின் இந்தக் கோரிக்கையை ஏற்று சிம்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால், ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில்  ‘மாநாடு’ படத்திற்காக சிம்பு பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.  சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்த சிம்பு சில தினங்களுக்கு சபரிமலை சென்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.