தெலுங்கில் முன்னணி நடிகையாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

உலகம்

 

தமிழில் முன்னணி கதாநாயகி இடத்தை நோக்கி வளர்ந்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது  தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கு இளம் ஹீரோக்களில் ஒருவரான  விஜய் தேவரகொண்டாவின் ‘வேல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.

மேலும், இன்னொரு இளம் ஹீரோவான நானி நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான  ‘மிஸ் மேச்’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆகவே, தமிழில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெறுவதற்குள் தெலுங்கில் முன்னணி நடிகை அந்தஸ்தை ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றுவிடுவார் என்கிற பேச்சு கோலிவுட்டில் பலமாக பேசப்படத் தொடங்கியுள்ளது.