’ரவுடி பேபி’க்கு பிறகு ஹிட்டான தனுஷ் பாடல்!

slider சினிமா
pattas-பட்டாஸ்

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’அசுரன்’ மற்றும் ’எனை நோக்கி பாயும்’ படங்களுக்கு அடுத்து தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்’.  இப்படத்தை ’எதிர் நீச்சல்’, ’காக்கிச்சட்டை’, ’கொடி’ படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா நடித்துள்ளார்.

இப்படம் 2020ம் ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ரீலீஸாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் “சில் புரோ” எனும் பாடலை படக்குழு வெளியிட்டது. தனுஷ் பாடியுள்ள இந்தப் பாடல் யூடியூபில் செமையாக வைரலாகி வருகிறது. தற்போது டிரெண்டிங்கிலுள்ள இந்தப் பாடலை இதுவரை ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.