குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம்

slider சினிமா

 

சம்பவம்

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஏதாவது ஒருவகையில் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும்.  இந்த வகையில் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துவரும் படத்துக்கும் ஒரு விவகாரம் துளிர்விடத் தொடங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.  ‘விஜய் 64’ என்று மட்டும் தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், இந்தப் படத்திற்கு ’சம்பவம்’ என்று தலைப்பு வைக்கவுள்ளார்கள் என்கிற செய்தி திடீரென புறப்படத் தொடங்கியுள்ளது. என்றாலும், இது இன்னும் படக்குழுவினரால் உறுதி செய்யப்படவில்லை.

ஆனாலும், இந்த தகவல் வந்தவுடனே ரஞ்சித் பாரிஜாதம் என்பவர், “நான்  ‘சம்பவம்’ என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குநர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள்.  ‘சம்பவம்’ என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கும் ’சம்பவம்’ என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ’சம்பவம்’ என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.