ஏ.ஆர்.ரகுமானுடன் முதன்முதலாக இணையும் சிவகார்த்திகேயன்!

உலகம்

 

Sivakarthikeyan-ARRahman

‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு  பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம்  ‘ஹீரோ’. இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கிவுள்ளார். இதற்கு அடுத்ததாக `இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி ரகுல் ப்ரீத் சிங்.  இன்னும் இப்படத்துக்கு பெயரிடவில்லை.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகையில், ’’நான் நடிக்க வரும்போது, ஷங்கர் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் பாடலுக்கு நடனமாட வேண்டும் என்ற கனவோடு வந்தேன். அதில் ஒன்று தற்போது நனவாகியுள்ளது’’  என்று கூறியுள்ளார். மேலும்,  இப்படத்திற்காக இப்போதே ஏ.ஆர்.ரகுமான் மூன்று  பாடல்களை ரெகார்ட் செய்துவிட்டார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.