அரசியல்வாதியாக மாறும் அமீர்!

slider சினிமா
narkali-நாற்காலி

தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அமீர்  ‘யோகி’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இதன்பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் வி.இசட்.துரை இயக்கத்தில்  ’நாற்காலி’ எனும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அமீர்.  இது முழுக்க முழுக்க நடப்பு அரசியலை பின்னணியாகக் கொண்ட படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இப் படத்தில்   அமீருக்கு வித்தியாசமான அரசியல்வாதி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். படப்பிடிப்பு இன்று டிசம்பர் 3ம் தேதி தொடங்கியபோதே, இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.