கே.ஜி.எஃப். போலவே தயாராகும் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’!

slider சினிமா
Avane-Srimannarayana-அவனே ஸ்ரீமன் நாராயணா

 

கடந்த வருடம் கன்னடத்தில் பிரமாண்ட தயாரிப்பில் உருவான கே.ஜி.எஃப். திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் வசூல் குவித்து சாதனை படைத்தது. கன்னடத்தில் 100 கோடி வசூலைத் தாண்டிய முதல் படம் என்ற பெருமையும் கே.ஜி.எப் படத்திற்கு கிடைத்தது. இந்த வரிசையில் இதேபோன்று உருவாகவுள்ள படம் தான்   ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’.

கன்னடத்தில் பிரபலமான  புஷ்கர் பிலிம்ஸ்  இப்படத்தை தயாரிக்கிறது.  எச்.கே.பிரகாஷ் மற்றும் புஷ்கரா ரக்‌ஷித் ஷெட்டி கதை எழுதி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சச்சின் ரவி இயக்கி, எடிட்டிங் செய்கிறார்.  முதலில் கன்னட மொழியில் மட்டும் வெளியிட திட்டமிட்ட படக்குழு, கே.ஜி.எஃப்.  வெற்றியால் தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளதாம்.

கடந்த மூன்று வருடமாக இப்படம் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. அடுத்த வருட துவக்கத்தில் படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.